முள்ளங்கி சட்னி
நான்கு பெரிய முள்ளங்கியை தோல் சீவி, துண்டுகளாக நறுக்கவும். அதனுடன் நெல்லிக்காய் அளவு புளி, சிறிய கட்டி வெல்லம், தேவையான அளவு காய்ந்த மிளகாய் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு அரைக்கவும். கடாயில், ஒரு கரண்டி நல்லெண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்து வைத்துள்ள முள்ளங்கியை அதில் சேர்த்து, நீர் சுண்டும் வரை வதக்கவும். நிறைவாக, அரை டீஸ்பூன் வெந்தயப்பொடி போட்டு இறக்கவும்.
சப்பாத்தி மற்றும் தோசைக்கு இது சூப்பர் சைட் டிஷ்.
கமென்ட்: இதனுடன் கொத்தமல்லி, கறிவேப்பிலையையும் சேர்த்து வதக்கி அரைத்தால்... கூடுதல் மணம் மற்றும் ருசி நிச்சயம்.'
-pettagum-
Post a Comment