தோஞ்சல் கடலைப் பருப்பு குழம்பு | Thonjal Kadalai Paruppu Kulambu- Tamilnadu Recipies
தேவையான பொருட்கள்
தோஞ்சல் - 1
கடலைப்பருப்பு - 1 ஆழாக்கு
தேங்காய் - 1
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 3 டீஸ்பூன்
சாம்பார் வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 200 கிராம்
இஞ்சி - சிறுதுண்டு
பூண்டு - 6 பல்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணை - 1 குழிக் கரண்டி
செய்முறை
* தோஞ்சலைச் சுத்தம் செய்து `கட்' செய்து கொள்ளவும்.
* கடலைப் பருப்பை ஊற வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.
* தேங்காய், இஞ்சி, பூண்டு அரைத்துக் கொள்ளவும்.
* குக்கரில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் உரித்த சாம்பார் வெங்காயம், நறுக்கிய தக்காளி இவற்றைச் சேர்த்து வதக்கவும்.
* அதனுடன் தோஞ்சலைச் சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியாத்தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
* தொடர்ந்து கடலைப்பருப்பு மற்றும் அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து குக்கரில் வேக வைத்து இறக்கவும்.
* சுவையான தோஞ்சல் கடலைப்பருப்பு குழம்பு ரெடி.
Post a Comment