BREAKING NEWS

Category 5

Category 6

Category 7

Friday, July 19, 2013

ஜிகிர்தண்டா (இதயத்தைகுளிரவைக்கும்பானம்)



தேவையான பொருட்கள்
பால் – ஒரு லிட்டர்
சர்க்கரை – 8 டேபிள் ஸ்பூன்
கடற்பாசி – 4 டேபிள் ஸ்பூன்
ரோஸ் சிரப் – 1 டேபிள் ஸ்பூன்
நன்னாரி ஸிரப் – 1 டேபிள் ஸ்பூன்
ஐஸ்கிரீம் ஸ்கூப் (வெனிலா) – 1
பால் கோவா – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
ஒரு லிட்டர் பாலைசர்க்கரை சேர்த்து அடிகனமான வாணலியில் மெல்லிய தீயில் கொதிக்க விட்டுரோஸ் கலர் சேர்க்கவும்.
பாலை அரைலிட்டராக சுண்ட வைத்து ஆறியவுடன் பிரிஜ்ஜில் 6 மணி நேரங்கள் வைக்கவும்.
கடற்பாசியை சூடான நீரில் ஒரு கொதிவிட்டு இறக்கி, 2 மணி நேரம் வைக்கவும். 2 மணி நேரம் கழித்து ஜெல்லி போல உள்ள `சைனா கிராஸை’ சிறு துண்டுகளாக வெட்டிபிரிஜ்ஜில் 6 மணி நேரம் குளிர வைக்கவும்.
குளிர்ந்த பாலை முதலில் நீளமான ஒரு கண்ணாடித் தம்ளரில் பாதியளவு ஊற்றவும்.
இப்போது பாலின் மேல் ஜெல்லிகள் போல உள்ள சைனாகிராஸ் துண்டுகளைப் போடவும்.
பிறகு ரோஸ் ஸிரப்நன்னாரி ஸிரப் ஊற்றவும்.
தொடர்ந்து வெனிலா ஐஸ்கிரீம் ஸ்கூப்பை வைத்து அதன் மேல் பரவலாக பால்கோவாவைத் தூவி ஜில்லென்று கொடுக்கவும்.
வெயிலில் தளர்ந்த உடலைக் குளிரவைத்து ஆனந்தத்தில் ஆழ்த்தி மனதிற்கு இதமளிக்கும் ஜில் ஜில் ஜிகிர்தண்டா தயார்.
:நன்றி:senthilvayal.wordpress.com

ஓட்ஸ் நோன்பு கஞ்சி

Enlarge this image Click to see fullsize



தேவையான பொருள்கள்:
----------------------------------
ஓட்ஸ்-அரை கப்
தேங்காய் விழுது-1டீஸ்பூன்
மிக்ஸ் வெஜிடபில்-கால் கப்
இஞ்சி,பூண்டு-அரை டீஸ்பூன்(விழுது)

பூண்டு-3பல்வெங்காயம்-ஒன்று
தக்காளி-ஒன்று
பச்சை மிளகாய்-இரண்டு
புதினா,கொத்த மல்லி-சிறிதளவு
எண்ணை-2டீஸ்பூன்
மஞ்சள் தூள்-கால் டீஸ்பூன்
மிளகாய் தூள்-அரை டீஸ்பூன்
கரம் மசாலா-சிறிதளவு
உப்பு-தேவையான அளவு

செய்முறை: 
----------------

தக்காளி,வெங்காயம், பச்சை மிளகாய்,பூண்டு
எல்லாவற்றையும் பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தை சூடுபடுத்தி அதில் எண்ணை விட்டு
வெங்காயம்,பூண்டு போட்டு வதக்கவும் பின் தக்காளி,
பச்சை மிளகாய் போட்டு வதக்கவும் எல்லாம் நன்கு
வதங்கியதும் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து பச்சை
வாசம் போகும் வரை வதக்கவும்.

அதனுடன் அனைத்து தூள் களையும் சேர்த்து வதக்கவும்
பின் தேங்காய் விழுது, வெஜிடபில்,உப்பு சேர்த்து கிளறவும்
பிறகு அரை கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்
நன்கு கொதித்ததும் ஓட்ஸ் போட்டு கொதிக்க விடவும்
எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்து வெஜிடபில் வெந்ததும்
புதினா,மல்லி தூவி இறக்கவும்.
 
சுவையான ஓட்ஸ் நோன்பு கஞ்சி ரெடி.




இணையத்திலிருந்து

இரால் வாடா or காயல் வாடா

இரால் வாடா or காயல் வாடா 

தேவையான பொருட்கள்

  • இரால் - 20
  • அரிசி மாவு - 2 கப்
  • மாசித்தூள் – 3 மேசைக்கரண்டி
  • தேங்காய் பூ - 6 மேசைக்கரண்டி
  • வெங்காயம் - 3 பெரியது
  • மிளகாத்தூள் - 3 தேக்கரண்டி
  • பச்சைமிளகாய் – 2
  • மஞ்சள்தூள் - தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு
  • கருவேப்பிலை - சிறிது
  • அரைக்க: 2 காய்ந்த மிளகாய், சிறிது சோம்பு, சிறிது சீரகம்
  • எண்ணெய் - பொறிக்க 

செய்முறை

  • இராலை கழுவி சிறிது மஞ்சள் தூள் 1-தேக்கரண்டி மிளகாத்தூள்-3தேக்கரண்டி,, உப்பு சிறிதுசேர்த்து மெல்லிய தீயில் வதக்கிக் கொள்ளவும்..
  • பின் ஒரு சட்டியில் நறுக்கிய பச்சைமிளகாய்,வெங்காயம்,உப்பு,கருவேப்பிலை,மிளகாத்தூள்,மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கி அதனுடன் ஏற்கனவே வதக்கியஇராலை சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும், அதில் அரைக்க வேண்டிய 2-காய்ந்த மிளகாய், சிறிது சோம்பு, சிறிது சீரகம் இவற்றை அரைத்து இதனுடன் சேர்த்து, மாசித்தூளையும் சேர்த்து நன்கு கிளறி சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கி வைக்கவும்.
  • பின் ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் வெண்ணீரில் உப்பு, மஞ்சள்தூள், தேங்காய் பூ சேர்த்து வேகவிடவும்.பின் அரிசி மாவை போட்டு நன்கு கிளறி இறக்கி மிதமான சூட்டில் நன்கு பிசைந்துக் கொள்ளவும் இதனுடன் ஒரு கைப் பிடியளவு பழைய சோற்றினை அரைத்து சேர்த்தால் வாடா மெதுவாக இருக்கும்.
  • பின்பு  ஒரு துணியை தண்ணீரில் நனைத்து பிழிந்து,.பின் அதன் மேல் சிறு உருண்டை அளவு மாவை வைத்து நன்கு வட்டமாக தட்ட வேண்டும். பின் அதன் மேல் வதக்கி வைத்த வெங்காய கலவையை சிறிது வைத்து இன்னொறு சிறு உருண்டை அளவு மாவை வைத்து முதலில் தட்டின மாதிரியே இந்த மாவையும் தட்டி வெங்காய கலவைக்கு மேலே வைத்து சிறிது தண்ணீர் தொட்டு நன்கு மூடிவிடவும் வாடா வெடித்து சிதறாமல் இருக்க நன்கு ஒட்டி மூட வேண்டும்.இப்போது இதன் தோற்றம் சிறிய மலைக் குன்று போல் இருக்கும்.  
  • இதே போல் வாடாவை செய்து வைத்துக் கொண்டு, எண்ணையை சூடாக்கி மிதமான தீயில் வைத்து பொறித்து எடுக்கவும்.
  • சுவையான வாடா ரெடி…
  • தூத்துக்குடி மாவட்ட காயல் பட்டிணத்தில் இந்த வாடா ரெம்பவும் பிரபலம். நோன்பு காலங்களில் மக்கள் வாடா கடைகளில் (குறிப்பாக வாடா சுடும் இடத்திலேயே கூட்டம் கூட்டமாக வந்து வாங்கிச் செல்வர்.

    • சென்னையில் தற்போது மண்ணடியில் மட்டும் வாடா கிடைக்கிறது. கறி கஞ்சியுடன் இதை சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.



குறிப்புகள்:மெஹர் சுல்தான்

சுவையான மீன் வடை.

சுவையான மீன் வடை.

மீன் வடையின் சுவை அலாதியானதுஅதிகம் முள் இல்லாத மீன்தான் வடை செய்ய ஏற்றது
 
தேவையான பொருட்கள்

மீன் துண்டுகள் - 500 கிராம்
முட்டை - 1உருளைக்கிழங்கு - 100 கிராம்
மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்

பச்சைமிளகாய் - 3உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க


வடை செய்முறை

மீனை கழுவி சுத்தம் செய்து வானலியில் சிறிதளவு நீர்விட்டு வேக வைக்கவும்பின்னர் அதை எடுத்து முள்தோல் நீக்கி நன்கு பிசையவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்துதோல் உரித்து நன்கு மசிக்கவும்.
வெங்காயம்பச்சை மிளகாயைப் பொடியாக வெட்டவும்.
மீன்உருளைக்கிழங்குமிளகாய்த் தூள்வெட்டிய வெங்காயம்பச்சை மிளகாய்உப்புமுட்டை எல்லாம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்எண்ணெயைக் காய வைத்து சிறுசிறு வடைகளாகத் தட்டிப் போட்டு பொன்னிறமாக சிவந்ததும் எடுக்கவும்ருசியான மீன் வடை தயார்இதை தோசைக்கல்லில் தட்டி வைத்து கட்லெட் போல செய்யலாம்சுவை சூப்பராக இருக்கும்.
குறிப்புகள்: மெஹர் சுல்தான்

Saturday, July 13, 2013

30 வகை தொக்கு

30 வகை தொக்கு

தொக்கு… சொல்லும்போதே நாவில் நீர் ஊற வைக்கும் விசேஷ உணவு அயிட்டம்!

இன்றைய பிஸியான வாழ்க்கைச் சூழலில், எதையும் ஆற அமர செய்து சாப்பிட நேரமின்றி தவிக்கும் சகோதரிகளுக்கு, சந்தேகமே இல்லாமல் தொக்கு ஒரு வரப்பிரசாதம்தான்.

காலையில் டிபனுக்கு, மதியம் சாதத்துக்கு, மீண்டும் இரவு உணவுக்கு என்ன சைட் டிஷ் செய்வது என்று குழம்பித் தவிப்பவர்களுக்கு, ‘நானிருக்க பயமேன்’ என்று அபயக்கரம் நீட்டும் சிம்பிளான சைட் டிஷ் – தொக்கு! பிரெட்டின்மேல் தடவி, ஸாண்ட்விச் செய்வதற்கும் தொக்கு உதவும்.

சாதாரணமாக நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பொருள்களையும் காய்கறிகளையும் வைத்தே இனிப்பு, காரம், கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு என அறுசுவைகளில் தினம் ஒரு தொக்கு தயாரிக்க கற்றுத் தருகிறார் ‘சமையல் திலகம்’ ரேவதி சண்முகம்.

இவற்றைத் தயாரிக்க ஆகும் நேரமும் குறைவு. செலவும் அதிகமில்லை. தினம் ஒரு தொக்கு செய்து பரிமாறிப் பாருங்கள், ‘தொக்கு’ப் பொடி போட்டது போல குடும்பமே உங்களைச் சுற்றி வரும்.

குறிப்பு: இந்தத் தொக்கு வகைகளை, ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை வைத்து உபயோகிக்கலாம். ஃப்ரிட்ஜிலும் வைக்கலாம். கொடுக்கப்பட்டிருக்கும் அளவுகளில் உப்பு, புளி, காரம் போன்றவற்றை அவரவர் சுவைக்கேற்ப கூட்டியோ, குறைத்தோ சேர்த்துக் கொள்ளலாம். ஆனாலும், இவை மூன்றும் சிறிது தூக்கலாக இருந்தால்தான் தொக்கு ருசிக்கும்!

பேரீச்சம்பழத் தொக்கு

தேவையானவை: பேரீச்சம்பழம் – 100 கிராம், மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன், உப்பு – 2 டீஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு – கால் கப்.

தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.

வறுத்துப் பொடிக்க: வெந்தயம் – கால் டீஸ்பூன், பெருங்காயம் – அரை டீஸ்பூன்.

செய்முறை: பேரீச்சம்பழத்தைக் கொட்டை நீக்கி, மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். வெந்தயத்தை வெறும் கடாயில் வறுத்துக்கொண்டு, எடுக்கும்போது பெருங்காயத்தைப் புரட்டி எடுத்துப் பொடித்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்து, நறுக்கிய பேரீச்சம்பழத்தைச் சேருங்கள். குறைந்த தீயில் மூன்று நிமிடங்கள் வதக்குங்கள். பின்னர் எலுமிச்சம் பழச்சாறு, மிளகாய்த்தூள், வெந்தயம் – பெருங்காயத்தூள் சேர்த்து, மூன்று நிமிடங்கள் நன்கு கிளறி இறக்குங்கள்.

தக்காளி தொக்கு

தேவையானவை: தக்காளி – 1 கிலோ, புளி – 1 எலுமிச்சம்பழ அளவு, மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன் (குவித்து அளந்தது), உப்பு – 1 டேபிள் ஸ்பூன், பூண்டு – பெரியதாக 4 பல்.

தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், எண்ணெய் – அரை கப்.

வறுத்துப் பொடிக்க: வெந்தயம் – அரை டீஸ்பூன், பெருங்காயம் – 1 டீஸ்பூன்.

செய்முறை: வெந்தயம், பெருங்காயத்தை முன்பு சொன்னது போல, வெறும் கடாயில் வறுத்துப் பொடித்துக்கொள்ளுங்கள். தக்காளியைக் கழுவித் துடைத்து, துண்டுகளாக நறுக்குங்கள். நறுக்கிய தக்காளியை மிக்ஸியில் போட்டு, அதனுடன் மிளகாய்த்தூள், புளி, உப்பு சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த விழுதை, அடி கனமான பாத்திரம் ஒன்றில் போட்டு, அடுப்பில் வைத்து கொதிக்கவிடுங்கள். கொதிக்க ஆரம்பித்ததும், அது வெளியே தெறிக்கும். இப்போதுதான் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். கொதிக்க ஆரம்பித்ததும், மூடியால் மூடிவிடுங்கள் (இல்லையெனில், கொதிக்கும் தொக்கு கைகளில் பட்டு, புண்ணாகும் வாய்ப்பு உள்ளது).அவ்வப்போது தீயைக் குறைத்துவிட்டு, மூடியைத் திறந்து கிளறுங்கள்.

தண்ணீர் ஓரளவுக்கு வற்றிச் சுருங்கியதும், மூடியை எடுத்துவிட்டு, ஓரளவுக்கு நடுத்தரத் தீயில் வைத்துக் கிளறிக்கொண்டே இருங்கள். அதே சமயத்தில், இன்னொரு அடுப்பில் ஒரு கடாயில் எண்ணெயைக் காயவிட்டு, கடுகைச் சேருங்கள். கடுகு பொரிந்ததும், அதைத் தக்காளிக் கலவையில் சேருங்கள். பின், பூண்டை (தோல் உரிக்காமல்) நசுக்கிச் சேருங்கள். வெந்தயம், பெருங்காயத்தூளைச் சேர்த்து, சுருங்கக் கிளறி இறக்குங்கள்.

பச்சை மிளகாய் – மல்லித் தொக்கு

தேவையானவை: மல்லித்தழை – 2 கட்டு, பச்சை மிளகாய் – 15, புளி – சிறிய எலுமிச்சம்பழ அளவு, உப்பு – ஒன்றரை டேபிள்ஸ்பூன், பூண்டு – 6 பல்.

தாளிக்க: கடுகு – 1 டேபிள்ஸ்பூன், எண்ணெய் – கால் கப்.

வறுத்துப் பொடிக்க: வெந்தயம் – 1 டீஸ்பூன், பெருங்காயம் – 1 டீஸ்பூன்.

செய்முறை: மல்லியைச் சுத்தம் செய்து, அலசித் தண்ணீரை வடியவிடுங்கள். ஒரு துணியில் அதைப் பரப்பி, ஈரம் காயும் வரை உலரவிடுங்கள். ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து, அதில் கடுகு தாளித்து, மிளகாய், பூண்டு, புளி சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்குங்கள்.

பின்னர் மல்லித்தழையைச் சேர்த்து, இரண்டு நிமிடங்கள் வதக்கி, இறக்கி, ஆறியதும் எல்லாவற்றையும் நைஸாக அரையுங்கள். வறுத்துப் பொடித்த வெந்தயம்-பெருங்காயத்தூள் சேர்த்து, நன்கு கலந்து வையுங்கள்.

கொத்துமல்லித் தொக்கு

தேவையானவை: மல்லித்தழை – 2 கட்டு (பெரியதாக), புளி – எலுமிச்சை அளவு, உப்பு – 1 டேபிள்ஸ்பூன்.

தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், நல்லெண்ணெய் – அரை கப்.

வறுத்துப் பொடிக்க: காய்ந்த மிளகாய் – 10, வெந்தயம் – 1 டீஸ்பூன், பெருங்காயம் – 1 டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: மல்லித்தழையைச் சுத்தம் செய்து, நறுக்கி, இரண்டு முறை அலசி எடுங்கள். எண்ணெயைக் காயவைத்து, வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை (கருகி விடாமல்) சிவக்க வறுத்து எடுத்து, மல்லி, புளி, உப்புடன் சேர்த்து மிக்ஸியில் அரையுங்கள். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்து, அரைத்த விழுதைச் சேருங்கள். சுருள, சுருளக் கிளறி இறக்குங்கள்.

பீட்ரூட் தொக்கு

தேவையானவை: பீட்ரூட் – கால் கிலோ, மிளகாய்த்தூள் – ஒன்றரை டேபிள்ஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு – கால் கப், உப்பு – 2 டீஸ்பூன்.

தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்.

வறுத்துப் பொடிக்க: வெந்தயம் – அரை டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், பெருங்காயம் – அரை டீஸ்பூன்.

செய்முறை: பீட்ரூட்டை மண் போகக் கழுவி, தோல் நீக்கித் துருவிக்கொள்ளுங்கள். வெந்தயம், பெருங்காயம், சீரகம் மூன்றையும் வெறும் கடாயில் வறுத்துப் பொடித்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்து, அத்துடன் பீட்ரூட் துருவலைச் சேருங்கள். நடுத்தரத் தீயில் வைத்து, வேகும்வரை கிளறுங்கள். பின்னர் எலுமிச்சம் பழச்சாறு, மிளகாய்த்தூள், வறுத்துப் பொடித்த தூள் ஆகியவற்றைச் சேர்த்து, நன்கு சுருளக் கிளறி இறக்குங்கள்.

பூண்டு தொக்கு

தேவையானவை: பூண்டு – அரை கிலோ, எலுமிச்சம் பழச்சாறு – 1 கப், மிளகாய்த்தூள் – அரை கப், உப்பு – கால் கப், வறுத்துப் பொடித்த வெந்தயம்-பெருங்காயப் பொடி – 1 டீஸ்பூன்.

தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், எண்ணெய் – அரை கப்.

செய்முறை: பூண்டைத் தோலுரித்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு சேருங்கள். கடுகு பொரிந்ததும், பூண்டைச் சேர்த்து, நடுத்தரத் தீயில் வைத்து, ஐந்து நிமிடங்கள் வதக்குங்கள். பின்னர் அத்துடன் எலுமிச்சம் பழச்சாறு, மிளகாய்த்தூள், உப்பு, வெந்தயம்-பெருங்காயப் பொடி சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

சாறு வற்றி, எண்ணெய் மேலே மிதக்கும்போது அடுப்பை அணைத்துவிடுங்கள். ஆறியபின், பாட்டிலில் எடுத்து வைத்து உபயோகப்படுத்துங்கள்.

வெங்காயத் தொக்கு

தேவையானவை: பெரிய வெங்காயம் – அரை கிலோ, பூண்டு (விரும்பினால்) – 10 பல், வினிகர் – கால் கப், மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன், உப்பு – 1 டேபிள்ஸ்பூன்.

தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், எண்ணெய் – அரை கப், கறிவேப்பிலை – சிறிது.

வறுத்துப் பொடிக்க: வெந்தயம் – 1 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், பெருங்காயம் – 1 டீஸ்பூன், (விருப்பப்பட்டால்) சோம்பு – அரை டீஸ்பூன்.

செய்முறை: வெங்காயத்தைத் தோல் நீக்கி, மிகவும் பொடியாக நறுக்குங்கள். பூண்டை ஒன்றிரண்டாக நசுக்கிக்கொள்ளுங்கள். பொடிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தனித்தனியே வறுத்து, ஒன்றாகப் பொடியுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயத்தைச் சேருங்கள். வெங்காயம் நன்கு வதங்கி, நிறம் மாறிப் பொரிந்ததும் பூண்டைச் சேருங்கள். இரண்டு நிமிடங்கள் வதக்கி வினிகர், மிளகாய்த்தூள், வறுத்துப் பொடித்த பொடி, உப்பு சேர்த்து சுருளாகக் கிளறி இறக்குங்கள்.

பச்சை மிளகாய் தொக்கு

தேவையானவை: பச்சை மிளகாய் (அடர் பச்சை நிறத்தில்) – கால் கிலோ, புளி – பெரிய எலுமிச்சம்பழ அளவு, உப்பு – 1 டேபிள்ஸ்பூன் (குவித்து அளந்தது), மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பொட்டுக்கடலை – கால் கப்.

தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், எண்ணெய் – அரை கப்.

வறுத்துப் பொடிக்க: வெந்தயம் – அரை டீஸ்பூன், கட்டிப் பெருங்காயம் – சிறு இலந்தைப்பழ அளவு, எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: பச்சை மிளகாயைக் கழுவி, ஈரம் போக நன்கு துடைத்து, துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். வெறும் கடாயில் வெந்தயத்தை வறுத்துக்கொள்ளுங்கள். ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து, பெருங்காயத்தை அதில் போட்டு, நன்கு பொரித்தெடுங்கள். அதிலிருக்கும் மீதி எண்ணெயுடன் மேலும் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயைச் சேர்த்து, நறுக்கிய மிளகாய்த் துண்டுகளைப் போட்டு, நன்கு வதக்கி எடுங்கள்.

பின்னர், வதக்கிய பொருள்களுடன் புளி, உப்பு, மஞ்சள்தூள், பொட்டுக் கடலை சேர்த்துத் தண்ணீரில்லாமல் அரைத்தெடுங்கள் (இந்தக் கலவையை ஆட்டுரலில் அரைப்பது சுலபம். மிக்ஸியில் அரைப்பதற்குச் சற்று சிரமமாகத் தான் இருக்கும். கிளறிக் கிளறிவிட்டுத்தான் அரைக்கவேண்டும்).

மீதமுள்ள எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து, சுருளக் கிளறி இறக்குங்கள்.

புளிச்சகீரை (கோங்குரா) தொக்கு

தேவையானவை: புளிச்சகீரை – 1 கட்டு, புளி – ஒரு எலுமிச்சம்பழ அளவு, வெல்லம் – ஒரு சிறிய துண்டு, உப்பு – 1 டேபிள் ஸ்பூன்.

தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், பூண்டு – 6 பல், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.

வறுத்துப் பொடிக்க: கடுகு – 1 டேபிள்ஸ்பூன், வெந்தயம் – 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 15, எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: கீரையை இலைகளாகக் கிள்ளி, கழுவித் துடைத்து, ஒரு துணியில் பரப்பி, ஒரு மணி நேரம் உலர விடுங்கள். எண்ணெயைக் காயவைத்து, மிளகாய், கடுகு, வெந்தயம் சேர்த்து, சற்று சிவந்ததும் அரித்து எடுங்கள். மீந்துள்ள எண்ணெயில் கீரையை சேர்த்து, நன்கு வதக்குங்கள். கால் கப் கொதிக்கும் நீரில் புளியை ஊறவிடுங்கள்.

வதக்கிய கீரை, புளி, வறுத்த கடுகு, வெந்தயம், மிளகாய், உப்பு, வெல்லம் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து, சற்றுக் கரகரப்பாக அரையுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, வதக்கிய பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, தொக்கில் சேர்த்துக் கலக்குங்கள்.

தக்காளி- பூண்டு தொக்கு

தேவையானவை: தக்காளி – 1 கிலோ, பூண்டு – கால் கிலோ, புளி – எலுமிச்சம்பழ அளவு, உப்பு – ஒன்றரை டேபிள்ஸ்பூன்.

தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – அரை கப்.

வறுத்துப் பொடிக்க: வெந்தயம் – 1 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், தனியா – 1 டீஸ்பூன், பெருங்காயம் – 1 டீஸ்பூன், காம்பு கிள்ளிய காய்ந்த மிளகாய் – 25.

செய்முறை: தக்காளியை, உப்பு, புளி சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். பூண்டைத் தோல் உரித்துக் கொள்ளுங்கள். வறுக்கக் கொடுத்துள்ள பொருள்களை, வெறும் கடாயில் தனித்தனியே வறுத்து ஒன்றாகப் பொடித்துக் கொள்ளுங்கள்.

எண்ணெயைக் காயவைத்து, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, பூண்டைச் சேருங்கள். ஐந்து நிமிடங்கள் வதங்கியபின், அரைத்த தக்காளி விழுதைச் சேருங்கள். தண்ணீர் வற்றி, சிறிது சேர்ந்தாற்போல வரும்போது, பொடித்து வைத்துள்ள பொடியைச் சேர்த்து, சுருளக் கிளறி இறக்குங்கள்.

பாகற்காய் தொக்கு

தேவையானவை: பாகற்காய் – அரை கிலோ, சின்ன வெங்காயம் – கால் கிலோ, புளி – எலுமிச்சம்பழ அளவு, மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன், வெல்லம் – 1 துண்டு, உப்பு – 2 டீஸ்பூன்.

தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், எண்ணெய் – அரை கப்.

செய்முறை: பாகற்காயைக் கழுவி, துடைத்து, விதை நீக்கி, பொடியாக நறுக்குங்கள். சின்ன வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து, கடுகு தாளித்து, பாகற்காயைச் சேர்த்து வதக்குங்கள்.

பாகற்காய் நன்கு வதங்கியதும், வெங்காயம் சேருங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி, இத்துடன் சேருங்கள். அத்துடன் உப்பு, மிளகாய்த்தூள், வெல்லம் சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.

மாங்காய் தொக்கு

தேவையானவை: கிளிமூக்கு மாங்காய் – 1, மிளகாய்த்தூள் – ஒன்றரை டேபிள்ஸ்பூன், உப்பு – 2 டீஸ்பூன், வறுத்துப் பொடித்த வெந்தயம் – பெருங்காயத் தூள் – 1 டீஸ்பூன்.

தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, பூண்டு (நசுக்கியது) – 3 பல்.

செய்முறை: மாங்காயைக் கழுவித் துடைத்துத் துருவிக் கொள்ளுங்கள் (தோல் நீக்கத் தேவையில்லை). பின்னர் துருவிய மாங்காயுடன், உப்பு சேர்த்து நன்கு பிசறி வையுங்கள். ஒருநாள் முழுக்க ஊறியதும், மறுநாள் பிழிந்து, ஒரு தட்டில் பரப்பி, வெயிலில் காயவையுங்கள் (பிழிந்த தண்ணீரைக் கீழே ஊற்றிவிட வேண்டாம். ஒரு பாத்திரத்தில் எடுத்து வையுங்கள்).

அன்று முழுதும் காய்ந்தபின், மாங்காய்த் துருவலை எடுத்துக் கொள்ளுங்கள். பிழிந்து வைத்திருக்கும் தண்ணீரில், மிளகாய்த்தூள், வறுத்த வெந்தய-பெருங்காயப் பொடி சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள்.

எண்ணெயைக் காயவைத்து, கடுகு, கறிவேப்பிலை, நசுக்கிய பூண்டு சேர்த்து வதக்கி, மாங்காய்ச் சாற்றில் சேருங்கள். அத்துடன், காயவைத்து எடுத்த மாங்காய்த் துருவலையும் சேர்த்துக் கலந்து வையுங்கள். ஆந்திரத்துச் சுவையுடன், வித்தியாசமான மாங்காய் தொக்கு தயார்.

கறிவேப்பிலை தொக்கு

தேவையானவை: கறிவேப்பிலை உருவியது – 3 கப், உளுத்தம் பருப்பு – கால் கப், புளி – எலுமிச்சை அளவு, வெல்லம் – ஒரு சிறு துண்டு, உப்பு – 1 டேபிள்ஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 20.

தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், பெருங்காயம் – 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, எண்ணெய் – கால் கப்.

செய்முறை: கறிவேப்பிலையைக் கழுவித் துடைத்து, துணியில் பரப்பி உலரவிடுங்கள். எண்ணெயைக் காயவைத்து, மிளகாய், சீரகம், உளுத்தம்பருப்பை வாசனை வந்து நிறம் மாறும் வரை வறுத்து எடுத்துக்கொண்டு, கறிவேப்பிலையை அதே எண்ணெயில், சிறிது சிறிதாக வதக்கி எடுங்கள்.

கால் கப் கொதிக்கும் நீரில் புளியை ஊறவிடுங்கள். வதக்கிய கறிவேப்பிலை, மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு, சீரகம், புளி சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரையுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, பெருங்காயம், மிளகாய் தாளித்து, அரைத்த விழுது, வெல்லம் சேர்த்து, சிறு தீயில் ஐந்து நிமிடங்கள் நன்கு கிளறி இறக்குங்கள்.

உருளைக்கிழங்கு தொக்கு

தேவையானவை: உருளைக்கிழங்கு – அரை கிலோ, புளி – 100 கிராம், மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், பெருங்காயம் – 1 டீஸ்பூன், உப்பு – ஒன்றரை டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் – 5, இஞ்சி – 1 துண்டு.

தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், எண்ணெய் – அரை கப்.

செய்முறை: உருளைக்கிழங்கைக் கழுவித் துடைத்து, தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்குங்கள். புளியை ஒன்றரை கப் கொதிக்கும் நீரில் ஊறவிடுங்கள். இஞ்சி, பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்து, பின்னர் பச்சை மிளகாய், இஞ்சி, சேர்த்து வதக்கி, நறுக்கிய உருளைக்கிழங்கைச் சேருங்கள்.

குறைந்த தீயில் உருளைக்கிழங்கை நன்கு வதக்குங்கள். உருளைக்கிழங்கு பாதியளவு வெந்தபிறகு, புளியைக் கரைத்து, வடிகட்டிச் சேர்த்து, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, பெருங்காயம் சேர்த்து, உருளைக்கிழங்கு வேகும்வரை (சிறு தீயில் வைத்து) கிளறுங்கள். உருளைக்கிழங்கு வெந்ததும், நன்கு கிளறி இறக்குங்கள்.

பீர்க்கங்காய் தொக்கு

தேவையானவை: பீர்க்கங்காய் – அரை கிலோ, பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 5, புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, தேங்காய்த்துருவல் – கால் கப், உப்பு – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்.

தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன், பெருங்காயம் – 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: பீர்க்கங்காயைக் கழுவித் துடைத்து, தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்குங்கள். வெங்காயத்தைத் தோலுரித்து, சிறு துண்டுகளாக நறுக்குங்கள். பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளுங்கள்.

எண்ணெயைக் காயவைத்து, கடுகு, பெருங்காயம், உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டுத் தாளித்து, பீர்க்கங்காய், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்குங்கள். பீர்க்கங்காய் வதங்கியதும், அதனுடன் தேங்காய், உப்பு, மஞ்சள் தூள், புளி சேர்த்து, மீண்டும் நன்கு வதக்குங்கள். ஆறியதும் கரகரப்பாக அரையுங்கள்.

சின்ன வெங்காயத் தொக்கு

தேவையானவை: சின்ன வெங்காயம் – கால் கிலோ, மிளகாய்த் தூள் – கால் கப், எலுமிச்சம் பழச்சாறு – அரை கப், உப்பு – ஒன்றரை டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன். தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், எண்ணெய் – கால் கப்.

வறுத்துப் பொடிக்க: கடுகு – 1 டேபிள்ஸ்பூன், சீரகம் – 2 டீஸ்பூன், பெருங்காயம் – 1 டீஸ்பூன்.

செய்முறை: சின்ன வெங்காயத்தை எடுத்து, மேலே சருகாக உள்ள தோலை மட்டும் நீக்குங்கள். ஒட்டிக்கொண்டிருக்கும் தோல் அப்படியே இருக்கட்டும். வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ள பொருள்களை வெறும் கடாயில் நன்கு சிவக்க வறுத்துப் பொடியுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அதில் வெங்காயத்தைச் சேருங்கள்.

வெங்காயம் நன்கு நிறம் மாறி, வாசனை வரும்வரை வதக்குங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், எலுமிச்சம் பழச்சாறு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, நன்கு கிளறுங்கள். கடைசியில் பொடித்து வைத்துள்ள தூளைத் தூவி, கிளறி இறக்குங்கள்.

‘த்ரீ இன் ஒன்’ தொக்கு

தேவையானவை: தக்காளி – அரை கிலோ, பெரிய வெங்காயம் – கால் கிலோ, பூண்டு – 150 கிராம், எலுமிச்சம் பழச்சாறு – கால் கப், மிளகாய்த்தூள் – கால் கப், மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், உப்பு – 2 டீஸ்பூன்.

தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்.

வறுத்துப் பொடிக்க: வெந்தயம் – 1 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், பெருங்காயம் – அரை டீஸ்பூன்.

செய்முறை: வெங்காயம், பூண்டைத் தோல் உரித்து, மிகவும் பொடியாக நறுக்குங்கள். தக்காளியையும் பொடியாக நறுக்குங்கள். பொடிக்கக் கொடுத்துள்ள பொருள்களை வெறும் கடாயில் நன்கு வறுத்துப் பொடித்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்து, பூண்டு, வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள்.

பூண்டு, வெங்காயம் நன்கு பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறுங்கள். தக்காளி கரைந்து நன்கு வெந்தவுடன், எலுமிச்சம் பழச்சாறு, வறுத்துப் பொடித்த பொடி சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்குங்கள். தக்காளி, வெங்காயம், பூண்டு மூன்றின் சுவையும் கலந்த ‘த்ரீ இன் ஒன்’ தொக்கு தயார்.

குடமிளகாய் தொக்கு

தேவையானவை: குடமிளகாய் – கால் கிலோ, எலுமிச்சம் பழச்சாறு – அரை கப், மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன், வறுத்துப் பொடித்த வெந்தயம்-பெருங்காயப் பொடி – 1 டீஸ்பூன், உப்பு – ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்.

தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: குடமிளகாயைக் கழுவித் துடைத்து, விதை நீக்கிப் பொடியாக நறுக்கித் தனியே வையுங்கள். மிளகாய்த் தூள், மஞ்சள்தூள், உப்பு, வெந்தயம், பெருங்காயத்தூள், எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்து, குடமிளகாயைச் சேர்த்து, மிதமான தீயில் நன்கு வதக்குங்கள். வதங்கியபின், அரைத்த விழுதைச் சேர்த்து, மிதமான தீயில் எண்ணெய் பிரியும் வரை வதக்கி இறக்குங்கள்.

மாங்காய் இஞ்சித் தொக்கு

தேவையானவை: மாங்காய் இஞ்சி – கால் கிலோ, எலுமிச்சம் பழச்சாறு – கால் கப், வினிகர் – 1 டேபிள்ஸ்பூன், உப்பு – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்.

தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், எண்ணெய் – அரை கப்.

வறுத்துப் பொடிக்க: காய்ந்த மிளகாய் – 20, வெந்தயம் – அரை டீஸ்பூன், பெருங்காயம் – அரை டீஸ்பூன்.

செய்முறை: மாங்காய் இஞ்சியைத் தோல் சீவித் துருவிக் கொள்ளுங்கள். பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் நன்கு வறுத்துப் பொடித்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகைச் சேருங்கள்.

கடுகு நன்கு பொரிந்ததும், துருவிய இஞ்சி, மஞ்சள்தூள் சேர்த்து, மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் வதக்குங்கள். பின்னர் எலுமிச்சம் பழச்சாறு, வினிகர், உப்பு சேர்த்து, ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். அத்துடன் பொடித்து வைத்துள்ள பொடியைச் சேர்த்து, நன்கு கிளறி இறக்குங்கள்.

இஞ்சி தொக்கு

தேவையானவை: இஞ்சி – கால் கிலோ, பச்சை மிளகாய் – 50 கிராம், புளி – 100 கிராம், வெல்லம் – ஒரு சிறு துண்டு, உப்பு – ஒன்றரை டேபிள்ஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்.

தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், பெருங்காயம் – 1 டீஸ்பூன், வெந்தயம் – 1 டீஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: இஞ்சியை நன்கு கழுவித் துடைத்து, தோல் சீவுங்கள். மீண்டும் ஒருமுறை கழுவி, ஈரம் போக நன்கு துடைத்து, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளுங்கள். அரை கப் கொதிக்கும் நீரில் புளியை ஊறவிடுங்கள். எண்ணெயைக் காயவைத்து, இஞ்சி, மிளகாயை நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.

வதக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், புளி, உப்பு எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரையுங்கள். எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து, சற்று சிவக்க வறுத்துக் கொள்ளுங்கள். அதில் அரைத்த விழுதையும் சேர்த்து, நன்கு சுருளக் கிளறி இறக்குங்கள்.

செளசெள தொக்கு

தேவையானவை: செளசெள – 1, பச்சை மிளகாய் – 8, புளி – எலுமிச்சம்பழ அளவு, தேங்காய்த் துருவல் – கால் கப், பூண்டு – 4 பல், சீரகம் – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – ஒன்றரை டீஸ்பூன்.

செய்முறை: செளசெளவை நன்கு கழுவி, விதை நீக்கி, சிறுசிறு துண்டுகளாக நறுக்குங்கள். (தோல் நீக்க வேண்டாம்). பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கொடுத்துள்ள எல்லாவற்றையும் ஒன்றாக அதில் சேர்த்து, ஐந்து நிமிடங்கள் வதக்கி இறக்குங்கள். ஆறியவுடன், மிக்ஸியில் கரகரப்பாக அரைத்தெடுங்கள். சப்புக்கொட்ட வைக்கும் இந்த செளசெள தொக்கு.

புளியங்காய் தொக்கு

தேவையானவை: நல்ல பிஞ்சு புளியங்காய் – கால் கிலோ, பச்சை மிளகாய் – 10, மல்லித்தழை – 1 கைப்பிடி, கறிவேப்பிலை – 1 கைப்பிடி, பூண்டு – 4 பல், உப்பு – 1 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்.

தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: புளியங்காயைச் சுத்தமாகக் கழுவித் துடைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் பச்சை மிளகாய், மல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, மிக்ஸியில் கரகரப்பாக அரையுங்கள்.

கடைசியில் பூண்டு சேர்த்து, ஒரு சுற்று சுற்றி எடுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்து, அரைத்து வைத்திருக்கும் புளியங்காய் கலவையில் சேர்த்துக் கலக்குங்கள்.

மாங்காய்-பச்சை மிளகாய் தொக்கு

தேவையானவை: சற்றுப் பெரிய மாங்காய் – 1, பச்சை மிளகாய் – 12, புளி – நெல்லிக்காய் அளவு, தேங்காய் – 1 கீற்று, பூண்டு – 4 பல்.

தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு _ 1 டீஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்.

வறுத்துப் பொடிக்க: காய்ந்த மிளகாய் – 4, உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன், தனியா – 1 டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன்.

செய்முறை: வறுத்துப் பொடிக்கக் கொடுத்திருக்கும் சாமான்களை வெறும் கடாயில் சிவக்க வறுத்துப் பொடித்துக் கொள்ளுங்கள். மாங்காயைக் கழுவி, துடைத்துத் தோல் சீவித் துருவிக் கொள்ளுங்கள். தேங்காய், பச்சை மிளகாய், புளி, உப்பு மிக்ஸியில் சேர்த்து, சற்றுக் கரகரப்பாக அரையுங்கள்.

பின்னர் அத்துடன் துருவிய மாங்காய், பூண்டு சேர்த்து, ஒரு சுற்று சுற்றிக் கொள்ளுங்கள். அதனுடன், வறுத்துப் பொடித்து வைத்திருக்கும் தூளையும் சேர்த்து, மேலும் இரு விநாடிகள் அரைத்து எடுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்து, அரைத்த கலவையில் சேருங்கள்.

வதக்கி அரைக்கும் மல்லி தொக்கு

தேவையானவை: மல்லித்தழை – 2 கட்டு, புளி – எலுமிச்சம்பழ அளவு, உப்பு – ஒன்றரை டேபிள்ஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்.

தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், எண்ணெய் – கால் கப்.

வறுத்துப் பொடிக்க: வெந்தயம் – 1 டீஸ்பூன், பெருங்காயம் – 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 15, உளுத்தம்பருப்பு – அரை கப், கடலைப்பருப்பு – கால் கப்.

செய்முறை: வெறும் கடாயில் வெந்தயத்தை வறுத்து, எடுக்கும் சமயத்தில் பெருங்காயத்தை சேர்த்துப் புரட்டி எடுங்கள். பின்னர், அரை டேபிள்ஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து, மிளகாயை நிறம் மாறாமல், குறைந்த தீயில் வறுத்து எடுங்கள். மீதமுள்ள எண்ணெயுடன், இன்னும் அரை டேபிள்ஸ்பூன் எண்ணெயைச் சேர்த்து, உளுத்தம்பருப்பையும் கடலைப்பருப்பையும் ஒன்றாக வறுத்தெடுங்கள்.

மல்லித்தழையை அலசிச் சுத்தம் செய்து, ஒரு துணியில் பரப்பினாற்போல் உலரவிடுங்கள். இரண்டு மணி நேரம் உலர்ந்ததும், அதை இரு தடவைகளில் (ஒரு தடவைக்கு ஒரு டீஸ்பூன் எண்ணெய் வீதம் காயவைத்து) வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள். வெந்தயப் பொடி, வறுத்த மிளகாய், பருப்பு வகைகள், புளி, வதக்கிய மல்லித்தழை எல்லாவற்றையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு, தண்ணீர் விடாமல், சற்றுக் கரகரப்பாக அரையுங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு தாளித்து, அரைத்த விழுதில் சேருங்கள்.

எலுமிச்சை தொக்கு

தேவையானவை: எலுமிச்சம்பழம் – 12, பச்சை மிளகாய் – 6, மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – ஒன்றரை டேபிள்ஸ்பூன், வறுத்துப் பொடித்த வெந்தய – பெருங்காயப் பொடி – 1 டீஸ்பூன்.

தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், எண்ணெய் – அரை கப்.

செய்முறை: எலுமிச்சம்பழத்தைக் கழுவித் துடைத்து, நறுக்கி, விதைகளை முற்றிலும் நீக்கிவிடுங்கள். அத்துடன் இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து பிசறி வைத்து, இரண்டு நாட்கள் ஊறவிடுங்கள்.

பின்னர் இதை மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்து, அரைத்த விழுதைச் சேருங்கள். அத்துடன் மிளகாய்த்தூள், வெந்தயம் – பெருங்காயப் பொடி சேர்த்து, சுருளக் கிளறி இறக்குங்கள்.

தோசைக்காய் தொக்கு

தேவையானவை: தோசைக்காய் – 1, பச்சை மிளகாய் – 5, காய்ந்த மிளகாய் – 4, சின்ன வெங்காயம் – 6, பூண்டு (சிறியதாக) – 2 பல், தேங்காய்த்துருவல் – 2 டேபிள்ஸ்பூன், மல்லித்தழை (நறுக்கியது) 1 டேபிள்ஸ்பூன், புளி – எலுமிச்சம் பழ அளவு, உப்பு – 1 டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: தோசைக்காயை தோல் நீக்கி, சிறு துண்டு களாக்குங்கள். விதையை நீக்கவேண்டாம். மிளகாயைக் கீறுங்கள். பூண்டு, வெங்காயத்தைத் தோல் உரித்து வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, காய்ந்த மிளகாய் சேர்த்து, இரண்டு நிமிடங்கள் வறுத்துக் கொள்ளுங்கள். பின் தோசைக்காய் துண்டுகள், மிளகாய், பூண்டு, வெங்காயம், தேங்காய்த்துருவல், மல்லித்தழை, புளி, உப்பு சேர்த்து, எல்லாவற்றையும் ஐந்து நிமிடங்கள் வதக்கி, இறக்குங்கள். ஆறியதும் மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.

கத்தரிக்காய் தொக்கு

தேவையானவை: கத்தரிக்காய் – கால் கிலோ, சின்ன வெங்காயம் – 100 கிராம், பச்சை மிளகாய் – 10, புளி – ஒரு எலுமிச்சம்பழ அளவு, மல்லித்தழை – 1 கைப்பிடி அளவு, தேங்காய் – 1 கீற்று. தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, பூண்டு – 6 பல் (விருப்பப்பட்டால்), எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: கத்தரிக்காய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, வெங்காயம், கத்தரிக்காய், பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள். நன்கு வதங்கியதும், புளி, உப்பு சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்கள் வதக்குங்கள். இறக்கி வைத்து, மல்லித்தழை, தேங்காய் சேர்த்துக் கிளறி ஆறவிடுங்கள். ஆறியதும் சற்றுக் கரகரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, (விரும்பினால்) நசுக்கிய பூண்டு சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கி, அரைத்த விழுதுடன் கலந்து வையுங்கள்.

நெல்லிக்காய் தொக்கு

தேவையானவை: பெரிய நெல்லிக்காய் – அரை கிலோ, உப்பு – கால் கப், மிளகாய்த்தூள் – கால் கப், எலுமிச்சம் பழச்சாறு – கால் கப், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்.

தாளிக்க: எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், கடுகு – 1 டீஸ்பூன்.

வறுத்துப் பொடிக்க: கடுகு – 1 டேபிள்ஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், பெருங்காயம் – அரை டீஸ்பூன்.

செய்முறை: நெல்லிக்காயை கழுவித் துடைத்து, ஆவியில் பத்து நிமிடங்கள் வேகவையுங்கள். பின்னர், அவற்றை எடுத்து ஆறவிட்டு, லேசாக அழுத்தினால், துண்டுகளாகப் பிரிந்து, கொட்டை வெளியே வந்துவிடும்.

வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ள பொருள்களை வெறும் கடாயில் வறுத்து, நன்கு பொடியுங்கள். எண்ணெயைக் காயவைத்து

Thursday, July 11, 2013

செய்முறை முர்தபா



 முர்தபா சென்னையில் பிர்தெவுஸ் ஹோட்டல், சீலாடு, மற்றும் புகாரி ஹோட்டலில் இது ரொம்ப பேமஸ்.இஸ்லாமிய இல்லங்களில் செய்யபடும், ரிச் டிபன்.



இது எங்க இஸ்லாமிய இல்லங்களில் செய்யும் விஷேஷ சமையலில் இதுவும் ஒன்றாகும்.






இது சென்னையில் உள்ள பிர்தவுஸ் ஹோட்டலில் ரொம்ப பேமஸ்.





பரோட்டாவிற்கு

மைதா = இரண்டு கப்
உப்பு ‍= சிறிது
டால்டா உருக்கியது = ஒரு மேசை கரண்டி
முட்டை = ஒன்று

பில்லிங்கிற்கு

எண்ணை = இரண்டு தேக்கரண்டி
மட்டன் கீமா = 200 கிராம் (இதில் சிக்கன் மட்டன் கீமா, பீஃப் கீமா எது வேண்டுமானாலும் போடலாம்.)
இஞ்சி பூண்டு பேஸ்ட் = இரண்டு தேக்கரண்டி
உப்பு = தேவைக்கு
சீரகத்தூள் = அரை தேக்கரண்டி
ம‌ஞ்ச‌ள் தூள் = அரை தேக்க‌ர‌ண்டி
மிள‌காய் தூள் = அரை தேக்க‌ர‌ண்டி
வெங்காயம் = கால் கிலோ
தக்காளி = ஒன்று
கர‌ம் ம‌சாலா தூள் = அரை தேக்க‌ர‌ண்டி
ப‌ச்ச‌மிள‌காய் = இர‌ண்டு
கொத்து ம‌ல்லி த‌ழை = ஒரு கைப்பிடி
முட்டை = மாவில் த‌ட‌வ‌ தேவையான‌ அள‌வு
எண்ணை + டால்டா (அ) ப‌ட்ட‌ர் = சுட‌த்தேவையான‌ அள‌வு






செய்முறை 

முதலில் மாவு தயாரிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து சிறிது தளர்த்தியாக குழைத்து பெரிய உருண்டகள் போட்டு ஓவ்வொன்றிலும் எண்ணை தடவி ஊறவைக்கவும்.

எண்ணையை காயவைத்து வெங்காயம் போட்டு வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட், அடுத்து தக்காளி, கொத்துமல்லி தழை சிறிது மட்டன் , மசாலா வகைகள் இப்படி எல்லா வற்றையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கி கடைசியாக கரம் மசாலா,கொத்துமல்லி தூவி கிளறி கலவையை ஆறவிடவும்.




.இப்போது மாவு நன்கு ஊறி இருக்கு அதை பெரிய வட்டவடிவமாக திரட்டவும்.
மாவில் தடவ தேவையான அளவு முட்டையை நன்கு நுரை பொங்க அடித்து கலக்கி கொள்ளவும்




வட்டமாக திரட்டிய மாவில் முட்டை கலவையை பரவலாக தடவிஆறிய மட்டன் பில்லிங்கை ஒன்னறை மேசை கரண்டி அளவு வைத்து நல்ல பரவாலாக வைத்து சதுர வடிவமாக மடிக்கவும்.




தவ்வா சூடானதும் எண்ணை ஊற்றாமல் முதலில் சதுர வடிவமாக தயாரித்ததை போட்டு லேசாக சூடானதும் திருப்பி போட்டு நன்கு கையால் அழுத்தி விடவும் இப்படி செய்வதால் எல்லா பக்கமும் சமமாக இருக்கும்







இப்போது எண்ணை கலந்த டால்டாவை சுற்றிலும் ஊற்றி நன்கு வெந்து சிவந்து வரும் போது ஒரு தட்டில் எடுத்து வைத்து ஒரு பக்கம் மட்டும் குறுக்கும் நெடுக்குமாக முழுவதும் வெட்டாமல் லேசாக நான்கைந்து லைன் போட்டு விடவும். அப்ப தான் சாப்பிடும் போது துண்டு துண்டாக பிச்சி சாப்பிட வசதியாக இருக்கும்





இப்படி முக்கோண வடிவாகவும் மடிக்கலாம்.






சாப்பிடும் முன் சிறிது பெப்பர், லெமன் பிழிந்து கெட்சப்புடன் சாப்பிடவும்.

( இது டயட் செய்பவர்கள் சாப்பிட முடியாது என்று என்ன வேண்டாம், டால்டா, முட்டை மஞ்சள் கரு தவிர்த்து செய்து சாப்பிடலாம்)

காய் கறிகள் முட்டை கோஸ், கேரட், உருளை, சேர்த்து இதே போல் முர்தபா தயாரிக்கலாம்.























மிக அருமையான டிபன், ரிச் டிபன், ஒன்று சாப்பிட்டாலும் ரொம்பவே பில்லிங்காக இருக்கும். காய் கறி கீரைவகைகள் , சிக்கன், மட்டன் எதுவைத்து செய்தாலும் ரொம்ப நல்ல இருக்கும்.
-samaiyalattakaasam-

30 வகை தோசை! செய்முறை

30 வகை தோசை!
மரவள்ளிக் கிழங்கு தோசை
தேவையானவை: புழுங்கலரிசி - 1 கப், மரவள்ளிக் கிழங்கு - சிறியதாக 1, காய்ந்த மிளகாய் - 6, சீரகம் - 1 ஸ்பூன், பெருங்காயம் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: மரவள்ளிக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி, 3 முறை பால் போக நன்கு கழுவிக் கொள்ளவும். புழுங்கலரிசியை கழுவி, 2 மணி நேரம் ஊற வைக்கவும். மிளகாய், உப்பு, பெருங்காயம், சீரகம் ஆகியவற்றை அரைத்து, அதோடு கிழங்கையும் சேர்த்து அரைக்கவும். பின்னர் ஊறிய அரிசியையும் சேர்த்து நன்றாக அரைக்கவும். (ஆட்டுரல் இல்லாதவர்கள் கிரைண்டர் அல்லது மிக்ஸியில் அரைக்கலாம்) ஆட்டிய மாவை தோசை ஊற்றும் பக்குவத்தில் வைத்துக் கொண்டு மெல்லிய தோசைகளாக ஊற்றி வெந்ததும் திருப்பி விட்டு, எண்ணெய்விட்டு சிவக்க வெந்ததும் எடுக்கவும். எல்லோரும் சாப்பிட ஏற்ற ஆரோக்கிய தோசை இது.
தக்காளி தோசை
தேவையானவை: பச்சரிசி - ஒன்றே கால் கப், உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், தக்காளி - 4, தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 10, பெருங்காயம் - பாதி சுண்டைக்காய் அளவு, உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசியையும், உளுத்தம்பருப்பையும் கழுவி 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். மிளகாயையும் தண்ணீரில் ஊறவிடவும் (ஊறினால் சீக்கிரம் அரைபடும்). தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கவும். சீரகம், பெருங்காயம், ஊறிய மிளகாய் ஆகியவற்றை முதலில் அரைத்துக் கொண்டு, பின்னர் பச்சரிசி, தேங்காய், உளுத்தம்பருப்பு சேர்த்து அரைக்கவும். அரைபட்டதும் தக்காளியையும் போட்டு நன்றாக ஆட்டவும். பின்னர் உப்பு சேர்த்து, அனைத்தையும் கலக்கி ஒரு மணி நேரம் கழித்து மெல்லிய தோசைகளாக தோசைக் கல்லில் சுட்டு, வெந்ததும் திருப்பிவிட்டு வேக வைத்து எடுக்கவும்.
கலர்ஃபுல்லாக கண்ணைப் பறிக்கும் இந்த தக்காளி தோசைக்கு, கொத்துமல்லிச் சட்னி மேலும் சுவை கூட்டும்.
கேழ்வரகு தோசை
தேவையானவை: கேழ்வரகு மாவு - 1 கப், ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு - அரை கப், உப்பு - தேவைக்கேற்ப, சின்ன வெங்காயம் - 15, பச்சை மிளகாய் - 2, சீரகம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கேழ்வரகு மாவு, ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு, உப்பு ஆகியவற்றை ஒன்று சேர்த்து கலந்து மறுநாள் வரை பொங்க விடவும் (12 மணி நேரம்). வெங்காயத்தை பொடியாகவும் பச்சை மிளகாயை சிறு வளையங்களாகவும் நறுக்கவும். மறுநாள் காலையில் மாவை நன்றாக கலக்கி விட்டு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, சீரகத்தை தேய்த்துப் போட்டு தோசைக்கல்லை காயவைத்து மெல்லிய தோசைகளாக ஊற்றி சூடாக இருக்கும்போதே பரிமாறவும். இதற்கு காரச் சட்னி ஏற்ற ஜோடி.
பரங்கிக்காய் அடை
தேவையானவை: புழுங்கலரிசி - 1 கப், உளுத்தம்பருப்பு - அரை கப், துவரம்பருப்பு - முக்கால் கப், பாசிப்பருப்பு - கால் கப், காய்ந்த மிளகாய் - 10, சோம்பு - அரை டீஸ்பூன், பெருங்காயம் - 1 சிட்டிகை, சின்ன வெங்காயம் - 6, உப்பு - தேவைக்கேற்ப, மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) - கால் கப், எண்ணெய் - தேவையான அளவு, பிஞ்சு பரங்கிக்காய் - 1 துண்டு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பரங்கிக்காயை தோல் சீவி, துருவிக்கொள்ளவும். அரிசியைத் தனியாகவும், பருப்புகளைத் தனித்தனியாகவும் ஊற வைக்கவும். மிளகாயை தண்ணீரில் ஊற வைக்கவும். 2 மணி நேரம் கழித்து சோம்பு, மிளகாய், உப்பு, வெங்காயம் மற்றும் பெருங்காயத்தை விழுதாக அரைத்தெடுக்கவும். மிக்ஸியில் முதலில் உளுத்தம்பருப்பை போட்டு, சற்று பெருபெருவெனவும், பின்னர் அரிசியையும் அதே மாதிரி அரைத்தெடுக்கவும். பாசிப்பருப்பை ஒரு சில விநாடிகள் மட்டும் அரைக்கவும். துவரம்பருப்பையும் ஒன்றிரண்டாக அரைத்தெடுத்து, அனைத்தையும் அரைத்த மிளகாய் விழுதுடன் ஒன்றாக கலந்து அதில் மல்லித்தழையைக் கலக்கவும்.
பின்னர் தோசைக்கல்லை சூடு செய்து, இந்த மாவை மெல்லிய அடைகளாக ஊற்றி எண்ணெய் விட்டு, அடையின் மேல் துருவிய பரங்கிக்காயைத் தூவி கரண்டியால் அழுத்திவிட்டு, பின் அடையை திருப்பிவிட்டு எண்ணெய் ஊற்றி, நன்கு மொறுமொறுவென வெந்ததும் எடுக்கவும். (ஈரப்பதம் இருக்கும்போதே பரங்கிக்காய் துருவலைத் தூவ வேண்டும்).
தூதுவளை தோசை
தேவையானவை: புழுங்கலரிசி - 1 கப், தூதுவளை இலை - 15, மிளகு - 10, சீரகம் - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் + நெய் - தேவையான அளவு.
செய்முறை: புழுங்கலரிசியை 3 மணி நேரம் ஊற வைத்து பின் மிக்ஸியிலோ, ஆட்டுக்கல்லிலோ பச்சை மிளகாய், மிளகு, சீரகம், தூதுவளை இலை, உப்பு சேர்த்து நன்றாக ஆட்டவும். பின்னர் தோசைக்கல்லில் இந்த மாவை மிக மெல்லிய ஊத்தப்பம் போல ஊற்றி நெய் + எண்ணெயைக் கலந்து அதை சுற்றிவர ஊற்றி, திருப்பிவிட்டு வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும். மார்பில் சளிக்கட்டியிருந்தால் அதை குணப்படுத்தும் தன்மை உள்ளது இந்த தோசை. ஆனால், சூடாக சாப்பிட்டால்தான் சுவை.
ஆப்பம்
தேவையானவை: பச்சரிசி - 1 கப், புழுங்கலரிசி - 1 கப், உளுத்தம்பருப்பு - கால் கப், வெந்தயம் - 1 டீஸ்பூன், ஜவ்வரிசி - 3 டீஸ்பூன், உப்பு - 1 டீஸ்பூன், எண்ணெய் - கல்லில் தடவ தேவையான அளவு, தேங்காய் (துருவியது) - 1 மூடி, சர்க்கரை - அரை கப்.
செய்முறை: அரிசி, பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக 2 மணி நேரம் ஊற வைத்து ஆட்டி, உப்பு சேர்த்து கலக்கவும். பின்னர் ஜவ்வரிசியில் சிறிது தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து, ஜவ்வரிசி வேகும்வரை காய்ச்சி, ஆறியதும் மாவுடன் கலந்து வைக்கவும் (12 மணி நேரம்). காலையில் நன்கு மாவை கலக்கி விடவும். தேங்காயைத் துருவி, மிக்ஸியில் போட்டு, முதலில் கெட்டிப்பால், பிறகு தண்ணீர்பால் என மொத்தம் இரண்டரை டம்ளர் எடுக்கவும். சர்க்கரை சேர்த்து அதைக் கலந்துகொள்ளவும். தோசைக்கல்லில் ஒரு சிறிய துணி கொண்டு, எண்ணெயைத் தொட்டு தடவி பின்னர் ஆப்ப மாவை எடுத்து ஆப்பமாக ஊற்றி எடுத்து, அதில் தேங்காய்ப்பாலை விட்டு பரிமாறவும்.
குறிப்பு: ஜவ்வரிசி காய்ச்சி ஊற்றுவதற்கு பதில், 1 கைப்பிடி பச்சரிசி சாதம் போட்டும் மாவுடன் ஆட்டலாம். ஆப்ப சோடா சேர்க்கத் தேவையில்லை.
மைதா மாவு தோசை
தேவையானவை: மைதா மாவு - 1 கப், பச்சரிசி மாவு - முக்கால் கப், உப்பு - தேவையான அளவு, சின்ன வெங்காயம் - 15, பச்சை மிளகாய் - 2, மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) - 2 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், மிளகு - 10, கறிவேப்பிலை - 1 ஆர்க்கு, எண்ணெய் - (தோசை சுடுவதற்கும், தாளிப்பதற்கும்) தேவையான அளவு.
செய்முறை: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை சிறு வளையங்களாக நறுக்கவும். மிளகை உடைத்துக்கொள்ளவும். மைதா, பச்சரிசி மாவு, உப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து ரவா தோசைக்கு கரைப்பதுபோல் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, சீரகம், மிளகு போட்டு தாளித்து அதில் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி மாவில் கொட்டவும். அத்துடன் மல்லித்தழை சேர்த்து கலக்கவும்.
சூடான தோசைக் கல்லில் மாவை எடுத்து அள்ளித் தெளித்த மாதிரி தோசையாக ஊற்றி எண்ணெய் விட்டு, ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிவிட்டு எண்ணெய் விட்டு நன்றாக மொறுமொறுப்பாக சிவக்க வெந்ததும் எடுக்கவும். வரமிளகாய் சட்னியுடன் இந்த தோசையை சாப்பிட்டால், சூப்பரோ சூப்பர்.
வெல்ல தோசை
தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், வெல்லம் (பொடித்தது) - 1 கப், பச்சரிசி - கால் கப் (அல்லது பச்சரிசி மாவு - கால் கப்), தேங்காய் (துருவியது) - கால் மூடி, ஏலக்காய் - 4, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: ஊறிய பச்சரிசியை ஆட்டி, தேங்காய் துருவல், ஏலக்காய்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். வெல்லத்தை 1 கரண்டி நீர் சேர்த்து சூடு செய்து வடிகட்டிக் கொள்ளவும். பின்னர் கோதுமை மாவு, வெல்ல நீர், தேங்காய் கலந்த பச்சரிசி மாவு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து (வேண்டுமானால் தண்ணீர் விட்டுக் கொள்ளலாம்) தோசை மாவு பக்குவத்தில் கரைத்துக் கொள்ளவும். தோசைக் கல்லில் மெல்லிய தோசைகளாக ஊற்றி, வெந்ததும் திருப்பிவிட்டு வேகவைத்து எடுக்கவும். வித்தியாசமான இந்த கிராமத்து தோசை, சத்துமிக்கதும் கூட.
ஆலு வெந்தயக்கீரை தோசை
தேவையானவை: தோசைக்கான மாவுக்கு: இட்லி அரிசி (புழுங்கல் அரிசி) - 1 கப், உளுத்தம்பருப்பு - இரண்டரை டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு. உருளைக்கிழங்கு மசாலுக்கு: சின்ன உருளைக்கிழங்கு - கால் கிலோ, தக்காளி - 1, வெங்காயத் தாள் - 1 செடி, பெரிய வெங்காயம் - 1, வெந்தயக்கீரை - 1 கட்டு, மிளகாய்தூள் - கால் டீஸ்பூன், தூள் உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - 6 டீஸ்பூன், வெண்ணெய் - 1 பாக்கெட்.
செய்முறை: இட்லி அரிசியையும், உளுத்தம்பருப்பையும் தனித்தனியே ஊற வைத்து (2 மணி நேரம்), பின் நன்றாக ஆட்டவும். உப்பு சேர்த்து முதல் நாள் மாலையே கலக்கிவைக்கவும் (12 மணி நேரமாவது புளிக்க வேண்டும்).
உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து நான்காகவோ அல்லது எட்டாகவோ நறுக்கவும். வெங்காயத்தை மெல்லிய துண்டுகளாக நறுக்கவும். தக்காளியையும் வெங்காயத் தாளையும் பொடியாக நறுக்கவும். வெந்தயக் கீரையில் இலைகளை எடுத்து அலசி வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும், சோம்பு போட்டு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கி, பின் தக்காளி, உருளைக்கிழங்கு, வெங்காயத்தாள், கீரை ஆகியவற்றை சேர்த்து கிளறவும். அதோடு தூள் உப்பு, மிளகாய்தூள் சேர்த்து வெந்ததும், சற்று சேர்ந்தாற்போல் இருக்கும்போது (வறண்ட பொரியல் மாதிரி இல்லாமல்) இறக்கவும். இதுதான் ஆலு மசாலா.
பின்னர் தோசைக்கல்லை காயவைத்து அதில் மாவை மெல்லிய தோசையாக ஊற்றி மூடி, வெந்ததும் அதன் மேல் சிறிது வெண்ணெயை எடுத்து ஸ்பூனால் தடவி, ஆலு மசாலாவை ஒரு பாதியில் வைத்து மறு பாதி தோசையை அதன்மேல் மடக்கி இருபுறமும் நன்கு வெந்ததும் எடுக்கவும்.
வெந்தயக்கீரையும் வெங்காயத்தாளும் இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனை வருக்குமான சத்தான உணவு இது.
மசால் தோசை
தேவையானவை: தோசை மாவு - 2 கப் (மசால் செய்ய) பெரிய உருளைக்கிழங்கு - 3, தக்காளி - 1, பெரிய வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 3, மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) - கால் கப், சோம்பு - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், பொட்டுக்கடலை - 1 கப்.
துவையலுக்கு: தேங்காய் துருவல் - அரை மூடி, பச்சை மிளகாய் - 4, உப்பு, இஞ்சி - ஒரு சுண்டைக்காய் அளவு, பூண்டு - 2 பல்.
செய்முறை: ஆலு வெந்தயக்கீரை தோசைக்கு சொன்ன மாதிரியே, தோசை மாவு தயார்செய்து கொள்ளவும். பொட்டுக்கடலையைப் பொடி செய்யவும். அடுத்ததாக, மசாலாவுக்கு உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து, சிறிது கட்டியும் தூளுமாக உதிர்க்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை சிறு வளையங்களாக நறுக்கவும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி சோம்பு, கடலைப்பருப்பு போட்டு தாளிக்கவும். அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கியதும் தக்காளி சேர்த்து வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு, 1 சிட்டிகை மஞ்சள்தூள் போட்டு கொதிக்க விடவும். பின் உப்பு சேர்க்கவும். வெங்காயம் வெந்ததும், உதிர்த்த கிழங்கையும் சேர்த்து கெட்டியானதும் மல்லித்தழை சேர்த்து கிளறி இறக்கவும்.
துவையலுக்கு கூறியுள்ள பொருட்கள் எல்லாவற்றையும் அரைத்தெடுக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, மாவை மெல்லிய தோசையாக ஊற்றி எண்ணெயை சுற்றிவர ஊற்றி மூடிவிடவும். தோசை வெந்ததும், அடுப்பை குறைந்த தணலில் வைத்து, ஸ்பூனால் துவையலை எடுத்து தோசை மேல் தடவவும். பின் பொட்டுக்கடலை மாவை தூவி, அதன் மேல் உருளைக்கிழங்கு மசால் வைத்து மறு பாதி தோசையை மடக்கவும். சூடாக எடுத்து பரிமாறவும். சாப்பிட்ட எல்லோரும் ‘ஒன்ஸ்மோர்’ கேட்பார்கள்.
கோதுமை தோசை
தேவையானவை: கோதுமை மாவு - 1 கப், வெள்ளை ரவை - 4 டீஸ்பூன், பச்சரிசி மாவு - 3 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு, சின்ன வெங்காயம் - 10, பச்சை மிளகாய் - 2, மல்லித்தழை - 4, கேரட் - 1, சீரகம் - அரை டீஸ்பூன், கெட்டி மோர் - கால் டம்ளர்.
செய்முறை: ரவையை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஊற வைக்கவும். வெங்காயத்தையும் மல்லித்தழையையும் பொடியாகவும் பச்சை மிளகாயை சிறு வளையங்களாகவும் நறுக்கிக் கொள்ளவும். கேரட்டை கழுவி, துருவிக்கொள்ளவும். கோதுமை மாவு, உப்பு, சீரகம், பச்சரிசி மாவு, ஊறிய ரவை, மோர் மற்றும் தண்ணீர் சேர்த்து சாதா தோசை மாவை விட சற்று தளர்வாக கரைத்துக் கொள்ளவும். அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மல்லித்தழை சேர்த்து கலக்கவும். சூடாக இருக்கும் தோசைக்கல்லில், ஒரு கிண்ணத்தால் மாவை எடுத்து அள்ளித் தெளித்த மாதிரி தோசையை ஊற்றி அதன் மேல் துருவிய கேரட்டை தூவவும். கரண்டியால் அதை அழுத்திவிட்டு சுற்றி வர எண்ணெய் விட்டு மூடி, வெந்ததும் தோசையை திருப்பி மறுபுறம் எண்ணெய் விட்டு மொறுமொறுவென வெந்ததும் எடுத்து விடவும். இதற்கு வரமிளகாய், பூண்டு சட்னி மேலும் சுவையைக் கொடுக்கும்.
மினி சாம்பார் தோசை
தேவையானவை: (தோசைக்கு) ஆலு தோசைக்கான மாவு - 2 கப், எண்ணெய் - தேவையான அளவு. (சாம்பாருக்கு) துவரம்பருப்பு - கால் கப், மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, பெரிய சைஸ் தக்காளி - 2, சின்ன வெங்காயம் - 15, சாம்பார் பொடி - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, பொடித்த வெல்லம் - 1 டீஸ்பூன், மல்லித்தழை - 2 டீஸ்பூன்.
வறுத்துப் பொடிக்க: கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், பெருங்காயம் - 1 சிட்டிகை, காய்ந்த மிளகாய் - 3. தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன். (தேங்காயை மட்டும் கடைசியாக வதக்கிப் பொடிக்கவும்). தாளிக்க: எண்ணெய் - 3 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயம் - 1 சிட்டிகை.
செய்முறை: முதலில் சாம்பாரை தயாரித்துக் கொள்ளவேண்டும். வேகவைத்த பருப்புடன் தக்காளி, வெங்காயம் சேர்த்து வேகவிடவும். சாம்பார் பொடி சேர்க்கவும். தக்காளி, வெங்காயம் வெந்ததும் வறுத்து பொடித்த (தேங்காய் சேர்த்த) பொடியைப் போட்டு உப்பு சேர்க்கவும். எல்லாம் ஒன்று சேர்ந்து சிறிது கெட்டியானதும், சிறிது எண்ணெயைக் காயவைத்து, தாளிப்பவற்றை போட்டு தாளித்து சாம்பாரில் கொட்டவும். அதோடு வெல்லத்தையும் சேர்த்து கலக்கி, கொதித்ததும் இறக்கி மல்லித்தழை தூவவும்.
தோசை மாவை நன்கு கலக்கி ஸ்பூனில் எடுத்து, குட்டி ஊத்தப்பங்களாக ஊற்றி (தோசைக்கல் சூடானதும் ஒரு தடவைக்கு 10 மினி ஊத்தப்பங்கள் ஊற்றலாம்), எண்ணெய் விட்டு, வெந்ததும் பின்புறம் திருப்பி சற்று சிவந்ததும் எடுக்கவும். சாம்பாரை வாயகன்ற கிண்ணத்தில் ஊற்றி அதில் தோசைகளை மிதக்க விட்டு, சூடாக பரிமாறவும். 1 கப் சாம்பாருக்கு, 7 குட்டி தோசைகள் சேர்க்கலாம். விருந்துகளுக்கு ஏற்ற ஸ்பெஷல் அயிட்டம் இது.
பெரு அரிசி தோசை
தேவையானவை: புட்டரிசி - அரை கப், தேங்காய் (துருவியது) - கால் மூடி, வெல்லம் (பொடித்தது) - கால் கப், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: அரிசியைக் கழுவி அரை மணி நேரம் ஊறவிட்டு நீரை வடித்து விடவும். வெல்லத்தை 2 டீஸ்பூன் நீர் விட்டு சூடு செய்து இறக்கி வடிகட்டவும். மிக்ஸியில் அரிசியையும் தேங்காயையும் போட்டு நீர் தெளித்து மைய அரைக்கவும். பின்னர் அதில் வெல்லத்தை வடிகட்டி சேர்த்து, தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். ஒரு மணி நேரம் கழித்து சூடான தோசைக் கல்லில் சிறு தோசைகளாக ஊற்றி எண்ணெய்விட்டு, அடிப்பக்கம் வெந்ததும் திருப்பி விட்டு (எண்ணெய் விட வேண்டாம்) ஓரிரு நிமிடங்களில் எடுத்து விடவும். இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்ல உணவாகும். சூடாகச் சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.
மரக்கறிக்காய் தோசை
தேவையானவை: பச்சரிசி - 3 டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு - 1 கப், பாசிப்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு - அரை கப், காய்ந்த மிளகாய் - 8, சோம்பு - கால் டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, தேங்காய் (துருவியது) - கால் மூடி, சின்ன வெங்காயம் - அரை கப், எண்ணெய் - ஒன்றரை கப்.
செய்முறை: மிளகாய், சோம்பு, சீரகம், உப்பு மூன்றையும் விழுதாக அரைக்கவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். அரிசி, பருப்பு வகைகளை முதல் நாள் இரவு கழுவி ஊறவைத்து, மறுநாள் காலையில் சற்று கரகரப்பாக அரைக்கவும். அதில் சின்ன வெங்காயம், துருவிய தேங்காய், அரைத்த மிளகாய் விழுது ஆகியவற்றை கலந்து அடைமாவு பக்குவத்தில் வைத்துக் கொள்ளவும்.
பின்னர் அதை தோசைக்கல்லில் சிறு ஊத்தப்பங்களாக ஊற்றி, வேகும் முன் திருப்பிவிட்டு அரை வேக்காடாக எடுக்கவும். பின்னர் வாணலியில் பொரிக்கத் தேவையான எண்ணெய் விட்டு சூடானதும், இந்த ஊத்தப்பங்களை ஒவ்வொன்றாக போட்டு நன்றாக சிவந்து மொறுமொறுவென வெந்ததும் எடுக்கவும். சூடான மரக்கறிக்காய் தோசை ரெடி. செட்டிநாட்டின் பிரபல மான பலகாரங்களில் இதுவும் ஒன்று.
தேங்காய் தோசை
தேவையானவை: பச்சரிசி - 1 கப், உளுத்தம்பருப்பு - கால் கப்புக்கு சற்று குறைய, தேங்காய் (துருவியது) - கால் மூடி, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: அரிசி + பருப்பை கழுவி 2 மணி நேரம் ஊற வைத்து, தேங்காய் + உப்பு சேர்த்து நன்றாக ஆட்டி வைக்கவும். 10 மணி நேரத்திற்கு பின் (சிறிது பொங்கியதும்) தோசைகளாகச் சுட்டு எடுக்கவும்.
இந்த தோசைக்கு காய்ந்த மிளகாய் - 8, பூண்டு - 2 பல், புளி - 3 சுளை, உப்பு சேர்த்து பச்சையாக அரைத்து, பின் வாணலியில் 4 டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு + பெருங்காயம் தாளித்து, அரைத்த சட்னியில் சூட்டுடன் விட்டு பரிமாறவும். மாலை நேரத்துக்கு ஏற்ற ருசியான சிற்றுண்டி இது.
ஸ்பெஷல் தோசை
தேவையானவை: புழுங்கலரிசி - 1 கப், பச்சரிசி - 1 கப், தோல் உளுந்து அல்லது வெள்ளை உளுத்தம்பருப்பு - 1 கப், காய்ந்த மிளகாய் - 4, மிளகு - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் + நெய் - தேவையான அளவு.
செய்முறை: புழுங்கலரிசியையும், பருப்பையும் தனித்தனியாக கழுவி ஊறவைத்து தோசை மாவு போல் ஆட்டி எடுக்கவும். பச்சரிசியை கழுவி நீர் வடியவிட்டு மிக்ஸியில் திரித்து சலிக்கவும். மிளகு, உப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை விழுதாக அரைக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து வைத்து மறுநாள் தோசைகளாக ஊற்றி எடுக்கவும். தனியாக சாப்பிடுவதற்கு மிகவும் ருசியானது.
வெற்றிலை தோசை
தேவையானவை: ஆலு தோசைக்கான மாவு - 1 கப், வெற்றிலை - சற்று அகலமானது - 4, எலுமிச்சம்பழச் சாறு - 2 டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: எலுமிச்சம்பழச் சாற்றை, கால் கப் நீரில் கலந்துகொள்ளவும். வெற்றிலையை எலுமிச்சம்பழச் சாறு கலந்த நீரில் நனைத்துக் கொள்ளவும். (இது, வெற்றிலையின் நிறம் மாறாமல் இருக்க உதவும்). பின்னர் மாவில் நனைத்து வைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி, அதன் நடுவில் மாவில் நனைத்த வெற்றிலையை வைத்து சுற்றிவர எண்ணெய்விட்டு வெந்ததும் திருப்பிவிட்டு எடுத்து விடவும்.
சளி, இருமல் இருப்பவர்களுக்கு ஊற்றித் தரலாம். விருந்துகளில் பரிமாறுவதற்கும் இது வித்தியாசமான தோசை.
பாசிப்பருப்பு தோசை
தேவையானவை: பாசிப்பருப்பு - 1 கப், பச்சரிசி - கால் கப், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, சின்ன வெங்காயம் - 10, பெருங்காயம் - 1 சிட்டிகை.
செய்முறை: அரிசி + பருப்பை கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு மிளகாய், பெருங்காயம், உப்பை சேர்த்து அரைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். அத்துடன் ஊறிய பருப்பையும், அரிசியையும் பெருபெருவென ஆட்டி எடுத்து அத்துடன் தேங்காய், வெங்காயம் சேர்த்து கலக்கி மெல்லிய தோசைகளாக ஊற்றி திருப்பிவிட்டு எடுக்கவும்.
வெஜிடபுள் தோசை
தேவையானவை: ஆலு தோசைக்கான மாவு - 2 கப், கேரட் - 1, பீன்ஸ் - 2, பட்டாணி (உரித்தது) - 2 டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 2, குடமிளகாய் - 1, தக்காளி - 1, எண்ணெய் - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு - கால் டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) அல்லது பொடியாக நறுக்கிய வெங்காயத் தாள் - கால் கப்.
செய்முறை: கேரட்டைக் கழுவி துருவிக் கொள்ளவும். வெங்காயம், பீன்ஸைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். குடமிளகாயையும் தக்காளியையும் மெல்லிய அரை வட்டங்களாக நறுக்கவும். வாணலியில் 4 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும் தாளிப்பவற்றை தாளித்து சிவந்ததும், கேரட், பீன்ஸ், பட்டாணி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி தோசை மாவுடன் சேர்த்து கலக்கவும். பின்னர் தோசைக்கல்லில் ஊத்தப்பம் போல் ஊற்றி (சற்று கனமாக), அதன் மேல் நறுக்கிய அரை வளையங்களான தக்காளி குடமிளகாயை பதித்து, மேலே மல்லித்தழை அல்லது வெங்காயத் தாள் தூவவும். சுற்றிவர எண்ணெய்விட்டு மூடி ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி விட்டு எண்ணெய் ஊற்றி, வெந்ததும் எடுத்துவிடவும். பார்ப்பதற்கு இது வெஜிடபுள் பீட்ஸா போல இருக்கும். தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் வெகு ஜோர்!
பீட்ரூட் ராகி தோசை
தேவையானவை: கேழ்வரகு மாவு - 1 கப், உப்பு - தேவைக்கேற்ப, ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு - கால் கப், துருவிய பீட்ரூட் - கால் கப், பச்சை மிளகாய் - 3, எண்ணெய் - தாளிக்க + தோசை சுடுவதற்கு தேவையான அளவு
செய்முறை: ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு, உப்பு, ராகி மாவு சேர்த்து கலந்து, 10 மணி நேரம் கழித்து தோசை மாவு பக்குவத்தில் கரைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, அதில் பச்சை மிளகாய், பீட்ரூட் சேர்த்து நன்கு வதக்கவும். வதக்கிய பீட்ரூட்டை மாவில் சேர்த்து கலக்கி, மெல்லிய தோசைகளாக ஊற்றி எண்ணெய் விட்டு, வெந்ததும் திருப்பி விட்டு மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு வேக வைத்து எடுக்கவும். சத்து மிகுந்த தோசை இது.
செட் தோசை
தேவையானவை: பச்சரிசி - 1 கப், புழுங்கலரிசி - 1 கப், உளுத்தம்பருப்பு - அரை கப், வடித்த பச்சரிசி சாதம் - 1 கைப்பிடி, உப்பு - தேவைக்கேற்ப, மஞ்சள்தூள் அல்லது கேசரி பவுடர் - 1 சிட்டிகை, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: அரிசி + பருப்பை கழுவி ஒன்றாக ஊற வைத்து (3 மணி நேரம்), சாதத்துடன் சேர்த்து மைய ஆட்டவும். பின் உப்பு கலந்துவைத்து, பொங்கிய பின் (10 மணி நேரம் கழித்து) மறுநாள் காலையில் அத்துடன் மஞ்சள்தூள் அல்லது கேசரி பவுடர் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லில் ஊத்தப்பமாக ஊற்றி இருபுறமும் எண்ணெய் ஊற்றி வேகவிட்டு எடுக்கவும். இதற்கு காரச் சட்னி மிகவும் சுவை கொடுக்கும். சென்னை போன்ற நகர்களில், ‘செட்தோசை-வடகறி’ என்பது டிபன்களில் மிகவும் பிரபலமான ஜோடி.
முள்ளுமுருங்கை இலை தோசை
தேவையானவை: பச்சரிசி - 1 கப், முள்ளுமுருங்கை இலை - 6, பச்சை மிளகாய் - 2, மிளகு - 10, சீரகம் - அரை டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் + நெய் - தேவையான அளவு, சின்ன வெங்காயம் - 10.
செய்முறை: அரிசியைக் கழுவி, 2 மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். முள்ளுமுருங்கை இலையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாய், உப்பு, மிளகு, சீரகம், இலை, அரிசி ஆகியவற்றை நன்கு ஆட்டவும். பின் அத்துடன் வெங்காயத்தை போட்டு கலக்கவும். பின் மெல்லிய ஊத்தப்பம் போல் ஊற்றி, சுற்றிவர நெய் விட்டு வேகவைத்து பின் திருப்பிவிட்டு அதே மாதிரி எண்ணெய் + நெய் ஊற்றி வெந்ததும் எடுக்கவும்.
பூண்டு புதினா தோசை
தேவையானவை: ஆலு தோசை மாவு - 2 கப், பூண்டு - 20 பற்கள், புதினா (கழுவி, பொடியாக நறுக்கியது) - 2 டேபிள்ஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1, எண்ணெய் - தேவைக்கேற்ப.
செய்முறை: பூண்டுப் பற்களை தோலுரித்து, நீளவாக்கில் இரண்டாக நறுக்கவும். மிளகாயைப் பொடியாக நறுக்கவும். 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு பூண்டை அரைப்பதமாக வதக்கி எடுக்கவும். 1 டீஸ்பூன் எண்ணெயில் புதினாவை லேசாக வதக்கி வைத்துக்கொள்ளவும். மாவை ஊத்தப்பமாக ஊற்றி அதில் சீரகம் சிறிது தேய்த்துப் போட்டு, அதன் மேல் வதக்கிய பூண்டு + புதினாவை பதிக்கவும். ஒவ்வொரு ஊத்தப்பத்துக்கும் 6-லிருந்து 7 துண்டு பூண்டு பதிக்கலாம். எண்ணெய் ஊற்றி வேகவிட்டு, பின் திருப்பிபோட்டு மேலும் சிறிது எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும். தக்காளிச் சட்னியுடன் சேர்த்து இதை சாப்பிட்டால், சுவை அமோகம்.
துவரம் பருப்பு தோசை
தேவையானவை: புழுங்கலரிசி - 1 கப், துவரம்பருப்பு - அரை கப், உப்பு - தேவையான அளவு, பச்சை மிளகாய் - 2, தேங்காய் துருவல் - 1 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: அரிசி, பருப்பை தனித்தனியாக ஊறவைத்து உப்பு சேர்த்து ஆட்டவும். பின் அதில் நறுக்கிய பச்சை மிளகாய், தேங்காய் சேர்த்து கலக்கி, உடனே மெல்லிய தோசைகளாக ஊற்றவும். சுற்றிலும் எண்ணெய் ஊற்றி, வெந்ததும் திருப்பிவிட்டு மேலும் சிறிது எண்ணெய் விட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும். இதற்கு குருமா சுவை கொடுக்கும்.
குறிப்பு: காரம் அதிகம் விரும்புவோர் பச்சை மிளகாய்க்கு பதில் 6 காய்ந்த மிளகாய்களை அரைத்துப் போடலாம்.
ரவா தோசை
தேவையானவை: பச்சரிசி ஆட்டியது - 1 கப், ரவை - அரை கப், மைதா மாவு - அரை கப், உப்பு - தேவைக்கேற்ப. தாளிக்க: எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், மிளகு - 10 உடைத்தது, சீரகம் - அரை டீஸ்பூன், கறி வேப்பிலை - 1 ஆர்க்கு, முந்திரிப்பருப்பு - 6, மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) - அரை கப்.
செய்முறை: ரவையை சிறிது தண்ணீர் சேர்த்து ஊறவைக்கவும். மல்லித்தழை, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கவும். முந்திரிப்பருப்பை பொடியாக நறுக்கி, எண்ணெயில் வறுத்து வைத்துக்கொள்ளவும். மைதா மாவை சிறிது தண்ணீர் விட்டு கரைத்துக் கொண்டு, அத்துடன் ஆட்டிய பச்சரிசி மாவு, ஊறிய ரவை, உப்பு ஆகியவற்றை சேர்த்து ஒன்றாகக் கலந்து வைக்கவும்.
பின்னர் வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் தாளிப்பவற்றை போட்டு தாளித்து மாவில் கொட்டவும். வறுத்த முந்திரியையும், கழுவிய மல்லித்தழையையும் மாவில் கலந்து எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து கலக்கி சூடான தோசைக்கல்லில், மாவைக் கரண்டியில் எடுத்து, அள்ளித் தெளித்த மாதிரி மிக மெல்லிய தோசைகளாக ஊற்றி, சுற்றி வர எண்ணெய் விட்டு மூடவும். வெந்ததும் மறுபுறம் திருப்பி விட்டு மொறுமொறுவென வேக வைத்தெடுக்கவும்.
விருப்பமுள்ளவர்கள், ரவா தோசைக்கு சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். இதற்கு பூண்டு, மிளகாய்ச் சட்னி தொட்டுச் சாப்பிட்டால் சூப்பர் டேஸ்ட்!
மெதுகீரை தோசை
தேவையானவை: புழுங்கலரிசி - 1 கப், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், அவல் - கால் கப், மோர் - 2 டம்ளர், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - தேவையானது, நச்சு கெட்ட (லெச்சகெட்ட) கீரை - 30 இலைகள், பச்சை மிளகாய் - 2, சின்ன வெங்காயம் - 15, பாசிப்பருப்பு - கால் கப், உப்பு - தேவைக் கேற்ப, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன்.
செய்முறை: புழுங்கலரிசி முதல் அவல் வரையிலான பொருள்களை 6-லிருந்து 8 மணி நேரம் வரை மோரில் ஊறவைத்து ஆட்டி, உப்பு சேர்த்து சிறிது புளிக்க விடவும். கீரையின் நடுவில் உள்ள நரம்பை நீக்கி பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை நடுவில் வகுந்துகொள்ளவும். சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பாசிப்பருப்பை அரைப்பதமாக வேகவிட்டு, நீரை வடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், தாளிப்பவற்றை போட்டு தாளிக்கவும். பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், கீரை சேர்த்து கிளறி, வெந்ததும் உப்பு சேர்க்கவும். கடைசியாக, வேகவைத்த பாசிப்பருப்பையும் சேர்த்து கிளறி எடுக்கவும்.
தோசை மாவை வட்டமாக மெல்லிய ஊத்தப்பமாக ஊற்றி சுற்றிவர எண்ணெய் விட்டு மூடவும். அடிப்புறம் வெந்ததும் மூடியைத் திறந்து அதன் மேல் கீரையை பரப்பிவிட்டு தோசைக் கரண்டியால் அழுத்தி விட்டு மறுபுறம் திருப்பாமல் எடுத்து பரிமாறவும். இந்தக் கீரை தோசை உடல்வலிக்கு நிவாரணம் தரும்.
சோயா தோசை
தேவையானவை: புழுங்கலரிசி - 1 கப், காய்ந்த சோயா - 2 டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு, சின்ன வெங்காயம் - 8, பச்சை மிளகாய் - 2.
செய்முறை: அரிசி, சோயா, உளுத்தம்பருப்பை கழுவி தனித்தனியாக 3-4 மணிநேரம் ஊறவைத்து, தனித்தனியாக நன்றாக ஆட்டி ஒன்று சேர்த்து உப்புக் கலக்கிவைக்கவும். பச்சை மிளகாய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். மாவு ஆட்டிவைத்த 10 மணி நேரம் கழித்து, அதில் நறுக்கிய வெங்காயம், மிளகாய் கலந்து மிக மெல்லிய தோசைகளாக ஊற்றி இருபுறமும் திருப்பிவிட்டு எண்ணெய் விட்டு, மொறுமொறுவென வேக வைத்து எடுக்கவும்.
ஜவ்வரிசி தோசை
தேவையானவை: புழுங்கலரிசி - ஒன்றரை கப், ஜவ்வரிசி (மாவு அரிசி) - 1 கப், சின்ன வெங்காயம் - 10, பச்சை மிளகாய் - 4, கடுகு - அரை டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை கழுவி, 2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். ஜவ்வரிசியைக் கழுவி, 4 மணி நேரம் தயிரில் ஊறவைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். முதலில் அரிசியை ஆட்டவும். பின் ஜவ்வரிசியையும் ஆட்டி எடுக்கவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சூடு வந்ததும் கடுகு தாளித்து பின்னர் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதோடு உப்பு சேர்த்து மாவில் கலந்து ரவா தோசை போல் ஊற்றி இருபுறமும் மொறுமொறுவென வேகவைத்து எடுக்கவும்.
கொத்தமல்லி தோசை
தேவையானவை: புழுங்கலரிசி - 1 கப், உளுத்தம்பருப்பு - 1 கைப்பிடி, மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) - அரை கப், மிளகு (உடைத்தது) - அரை டீஸ்பூன், இஞ்சி (துருவியது) - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு. தாளிக்க: சீரகம் - அரை டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன்.
செய்முறை: அரிசி, உளுத்தம்பருப்பை 2 மணி நேரம் ஊறவைத்து, ஆட்டவும். மல்லித்தழையை பொடியாக நறுக்கவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு, சூடானதும் தாளிப்பவற்றை போட்டு தாளித்து, இஞ்சியை சேர்த்து வதக்கவும். அத்துடன் ஆட்டிய மாவு, உப்பு, மல்லித்தழை, தாளித்தவை ஆகியவற்றை ஒன்று சேர்த்து கலந்து ரவா தோசைபோல் ஊற்றி இருபுறமும் மொறுமொறுப்பாக வெந்ததும் எடுத்து தேங்காய்ச் சட்னியுடன் பரிமாறவும்.
டிரை ஃப்ரூட் தோசை
தேவையானவை: புழுங்கலரிசி - 1 கப், உளுத்தம்பருப்பு - கால் கப், பெரிய கற்கண்டு (பொடித்தது) - 10 டேபிள்ஸ்பூன், பேரீச்சம்பழம் - 25, உலர் திராட்சை - 25, டூட்டி ஃப்ரூட்டி - 2 டேபிள்ஸ்பூன், தேன் - 5 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு - 30, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: அரிசி, பருப்பை கழுவி, தனித்தனியே 2 மணி நேரம் ஊறவைக்கவும். பேரீச்சம்பழத்தை விதை நீக்கி, சிறு சதுரங்களாக நறுக்கவும். ஊறிய அரிசி, பருப்பை நைஸாக ஆட்டவும். ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து கலக்கி, 10 மணி நேரம் பொங்க விடவும். மறுநாள் காலையில், தோசை ஊற்றப் போகும்போது பொடித்த கற்கண்டை மாவில் கலக்கவும். பின்னர் தோசைக் கல்லில் இதை மெல்லிய தோசைகளாக ஊற்றி எண்ணெய் விட்டு வெந்ததும், கலந்து வைத்திருக்கும் பேரீச்சம்பழம், உலர் திராட்சை, டூட்டி ஃப்ரூட்டி, வறுத்த முந்திரிப்பருப்பு ஆகியவற்றில் சிறிது எடுத்து தோசையின் ஒரு பாதியில் பரப்பவும். அதன் மேல் அரை டீஸ்பூன் தேன் விட்டு, மறு பாதி தோசையால் மூடி, வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
அனைவரின் நாவையும் கொள்ளைகொள்ளும் இந்த தோசை, பள்ளிக் குழந்தைகளுக்கு பிடித்தமான ஸ்நாக்ஸ்.
 
Copyright © 2013 சமையல் குறிப்புக்கள்
Shared by WpCoderX